view

செழுந்தமிழ் நற்பணி மன்றம் நடத்தும் ஊவா மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கான 2022/23 ம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு “Let's march towards prosperous Education” “செழுமையான கல்வியை பெற விரைந்திடு”

Total Pageviews

Saturday, October 15, 2016

Seminars in Madulsima Tamil Maha Vidiyalayam , Madulsima

 செழுந்தமிழ் நற்பணி மன்றம்   SELUNDHTHAMIZH CHARITY FOUNDATION ) மற்றும் BE-SMART SOCIAL CHELLENGERS CLUB இணைந்து பசறை, மடுல்சீமை மற்றும் லுணுகலை பகுதிகளுக்கு உள்ள தமிழ் பாடசாலைகளில் இவ்வருடம்  க.பொ.த சாதாரணதர பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களுக்காக நடத்தும் மாதிரிப் பரீட்சை மற்றும் கருத்தரங்குகள் இன்று வெள்ளிக்கிழமை (14/10/2016) ஆரம்பமாவதாக அறிவிக்கப்பட்டது.

பாடசாலை அதிபர், ஆசிரியர் மற்றும் மாணவர்களை படத்தில் காணலாம்.
அதன் அடிப்படையில் இந்த செயலமர்வின் முதல் கட்டமாக நம் தாய்மொழியான தமிழ் பாட கருத்தரங்கு இன்று .... 
பது/மடுல்சீமை தமிழ் மகா வித்தியாலயத்தில் 100 இற்கும் அதிகமான மாணவர்களின் பங்களிப்புடனும் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் இனிதே ஆரம்பமாகி இனிதே நிறைவுற்றது.
இந்நிகழ்வை சிறந்த முறையில் நடாத்த உதவிய பது/மடுல்சீமை தமிழ் மகா வித்தியாலய அதிபர் திரு.பெருமால் முத்துலிங்கம் அவர்களுக்கும் கருத்தரங்கை நடாத்தி தந்த ஆசிரியர் திரு.கோபாலகிருஷ்னர் அவர்களுக்கும் எமது இவ் செயலமர்வின் ஒழுங்கமைப்பு குழு சார்பாக இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
## நாம் அறிவித்து இருந்த ஏனைய பாடசாலைகளுக்கு வருகின்ற புதன்கிழமையன்று (19/10/2016) இடம்பெற உள்ளது என்பதையும் அறியத்தருகின்றோம்........##










No comments:

Post a Comment