view

செழுந்தமிழ் நற்பணி மன்றம் நடத்தும் ஊவா மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கான 2022/23 ம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு “Let's march towards prosperous Education” “செழுமையான கல்வியை பெற விரைந்திடு”

Total Pageviews

Wednesday, July 22, 2020

Importance of Education in Tamil Language

கல்விப் புரட்சி

இலவசப் பள்ளிக் கல்வித் திட்டம்

வேத விக்ஞான் மகா வித்யா பீடம் 1981 ஆம் ஆண்டு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களால் துவக்கப் பட்ட முதல் கிராமப் பள்ளியாகும். ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் வாழும் கலை மையத்திற்கு அருகில் சில உள்ளூர் சிறுவர்கள் புழுதியில் விளையாடிக் கொண்டிருந்ததைக் கவனித்து, கல்வி கற்கும் வாய்ப்பற்ற அவர்களுக்கு உதவும் எண்ணத்துடன் இப்பள்ளியைத் துவக்கினார்.


 

இக்குழந்தைகளைக் கவனித்துக் கொண்டு அவர்களுக்கு அடிப்படை சுகாதாரம்,கல்வி சார்ந்த விளையாட்டுக்கள், இவற்றைக் கற்பித்து, இலவச மதிய உணவு அளிப்பதற்கு ஓர் உள்ளூர் தன்னார்வத்தொண்டர் நியமிக்கப் பட்டார். இது குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் பெரும் கவர்ச்சியாகக் காட்சியளித்தது. இந்தப் பணி இன்று வரையில் தொடர்கின்றது. பள்ளி படிப்படியாக முன்னேறி ,ஒரு முறையான பாடத்திட்டம் ஏற்படுத்தப் பட்டு மாணவர் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.