2022 ம் ஆண்டுக்கான SDG இன் இலக்கு எண் 4 ஐ அடிப்படையாக கொண்டு பது/தியனகல தமிழ் வித்தியாலயத்தில் எதிர்கால கல்வி, கலாசார வளர்ச்சி வலுவூட்டல் செயற்பாடு 2022.04.30 திகதி சிறப்பாக நடைபெற்றது. இதற்கு சான்றிதழ் மற்றும் இதர பல உதவிகளை செழுந்தமிழ் நற்பனிமன்றம் வழங்கியது.
இச்செயற்திட்டத்தின் பிரதான நோக்கம் சிறுவர்களின் திறைமைகளை வெளிகொண்டுவருதல் மூலம் எதிர்காலத்தை சிறப்பாக்குதல் ஆகும்.
More Photos
Project Leaders
ஆ.கலைராஜ் (leader)
நெ.சீகன்போல்
சரண்விஜய்
Project Goal
சமமான பரம்பலடைந்த சகல சமூகங்களுக்கும் வாய்ப்புக்கிடைக்கக் கூடியவாறு கல்வியை பெற்றுக்கொள்வதை உறுதிசெய்தலும் அனைவருக்கும் வாழ்நாள் பூராகவும் கல்வியைப் பெற்றுக்கொள்ளக்கூடியவாறு அதனை மேம்படுத்தல்.* 2030 ஆம் ஆண்டளவில் சகல ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் சுதந்திரமான, சமனான மற்றும் பண்புத்தரமான ஆரம்ப நிலை மற்றும் இரண்டாம் நிலைக் கல்வியைப் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்தல்.
* 2030 ஆம் ஆண்டளவில் சகல ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் உயர் தரத்திலான முன் பிள்ளைப் பருவ அபிவிருத்திக்காக பிரவேசித்தல்.
* 2030 ஆம் ஆண்டளவில் சகல ஆண் மற்றும் பெண் பிள்ளைகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பண்புத்தரமுடைய தொழில்நுட்ப, தொழில்சார் மற்றும் மூன்றாம் நிலைக் கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான சமமான வாய்ப்பினை உறுதிச்செய்தல்.
* 2030 ஆம் ஆண்டளவில் சகல இளைஞர் யுவதிகள் மற்றும் வளர்ந்தோரில் குறிப்பிடத்தக்க அளவினர் எழுத்தறிவு, எண்ணறிவு ஆற்றலைப் பெறுவதை உறுதிச்செய்தல்.
* அபிவிருத்தியடைந்துவரும் மற்றும் விசேடமாக குறைந்த அபிவிருத்தியைக் கொண்ட நாடுகளுக்கு வழங்கப்படும் கல்விக்கான புலமைப் பரிசில்களை அதிகரித்தல்.
Selundhthamizh Charitable Foundation and SDG's Youth Council of Passara
No comments:
Post a Comment